Thursday, December 8, 2011

என்ன வேண்டும்?

Sometimes books and poems make more sense when you read them again. This one by Vairamuthu. Thought it is worth sharing. If only we had all this in life. 

வண்ணங்கள் தெரியாத பார்வை வேண்டும் 
வயதுக்கு சரியான வாழ்க்கை வேண்டும் 
கண்ணீரில் சுகம் காணும் ஞானம் வேண்டும் 
காமத்தை கடந்தேறும் யோகம் வேண்டும் 
சொன்னபடி கேட்கின்ற உள்ளம் வேண்டும் 
சொன்னால்தான் சாகின்ற தேகம் வேண்டும் 
நன்மைகளை சுரண்டாத நட்பு வேண்டும் 
நாளைக்கு கலங்காத செல்வம் வேண்டும் 
வேகாத உணவுண்ண பழக வேண்டும் 
வெறுந்தரையில் படுத்தாலும் உறக்கம் வேண்டும் 
தெய்வத்தை தேடாத ஞானம் வேண்டும் 
தெய்வங்கள் நாம் என்று தெளிய வேண்டும் 
மெய் இந்த வாழ்வென்று நம்ப வேண்டும் 
மேகம் போல் பொழிந்துவிட்டு கலைய வேண்டும்  

No comments: